sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 20 பக்தர்களுக்கு விமான டிக்கெட்

/

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 20 பக்தர்களுக்கு விமான டிக்கெட்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 20 பக்தர்களுக்கு விமான டிக்கெட்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 20 பக்தர்களுக்கு விமான டிக்கெட்


ADDED : டிச 18, 2025 04:58 AM

Google News

ADDED : டிச 18, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, மேச்சேரி, தெத்திகிரிப்பட்டி அபய ஆஞ்சநேயர் கோவிலில் இன்று காலை, 9:00 மணிக்கு தீர்த்தக்குட ஊர்வலம், மதியம், சிறப்பு அன்னதானம், இரவு, 7:00 மணிக்கு ேஹாமம் நடக்கிறது. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு, சிறப்பு அபி ேஷகம், அலங்காரம், அர்ச்சனை, 8:00 மணி முதல் அன்னதானம், 20 மாலை, 4:00 மணிக்கு ஹனுமன் வீதி உலா நடக்க உள்ளது.

நாளை வழிபட வரும் பக்தர்களுக்கு இலவச விமான பயண கூப்பன் வழங்கப்படும். தொடர்ந்து வரும், 27ல் அந்த கூப்பன்களுக்கு குலுக்கல் நடத்தி, 20 பக்தர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள், ஜனவரி அல்லது பிப்ரவரியில் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் இலவசமாக அழைத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலம் சேலம் அழைத்து வரப்படுவர் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.10,008 வடைமாலை

மேச்சேரி, வெள்ளாறு, வசந்தம் நகர் ராமபக்த ஆஞ்சநேயருக்கு, இன்று காலை, பால், தீர்த்தக்குட அபிேஷகம், கலச ஸ்தாபனம், ஆஞ்சநேயர் மூலமந்திர பாராயணம், 108 கலச பூஜை, தீபாராதனை, இன்னிசை பட்டிமன்றம் நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு, 10,008 வடைமாலை அலங்காரம், லட்சார்ச்சனை, தங்க கவச அலங்காரம், தீபாராதனை, அனுமன் ஸகஸ்ர நாமம், லட்சார்ச்சனை பூர்த்தி, உற்சவர் திருவீதி உலா, ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடக்க உள்ளது.

அதேபோல் நாளை, மேட்டூர், சேலம் கேம்ப், ஜீவ ஹனுமனுக்கு வடைமாலை சாற்றுதல், புஷ்பாஞ்சலி, அபிேஷகம், சிறப்பு அன்னதானம் நடக்க உள்ளது. கொளத்துார், மூலக்காடு ஊராட்சி அச்சங்காடு திம்மராய பெருமாள் கோவிலில் உள்ள, குடவரை கல்சிற்ப வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

மேட்டூர் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடைமாலை; கொளத்துார் சுப்ரமணியர் கோவிலில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம், வடை, வெற்றிலை மாலை அலங்காரம் செய்யப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us