சேலம்: தீபாவளி இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பூக்கள் தேவை அதிகரிக்க, சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டில் நேற்று ஏராமளானோர் குவிந்தனர். அதற்கேற்ப பூக்கள் விலை உயர்ந்தது.
கடந்த, 23ல் மல்லி கிலோ, 200க்கு விற்றது, நேற்று, 1,200 ரூபாயாக எகிறியது. அதேபோல், 120க்கு விற்ற முல்லை, 900; 260க்கு விற்ற ஜாதிமல்லி, 500; 60க்கு விற்ற காக்கட்டான், 600; 60க்கு விற்ற கலர் காக்கட்டான், 500, 60க்கு விற்ற மலை காக்கட்டான், 600 ரூபாய் என விலை உயர்ந்தது.அதேபோல், 20க்கு விற்ற சம்பங்கி, 100; 50க்கு விற்ற சாதா சம்பங்கி, 160; 25க்கு விற்ற நந்தியாவட்டம், 240; 50க்கு விற்ற சின்ன நந்தியாவட்டம், 300; 70க்கு விற்ற அரளி, வெள்ளை அரளி தலா, 180; 120க்கு விற்ற மஞ்சள் அரளி, செவ்வரளி தலா, 250; 80க்கு விற்ற ஐ.செவ்வரளி,
220 என, விலை உயர்ந்தது. இருப்பினும் ஏராளமானோர், பூக்களை வாங்கிச்சென்றனர்.