ADDED : மார் 17, 2026 04:30 AM

சேலம்: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதி
முறைகள் அமலுக்கு வந்துள்ளது. சேலத்தில் பறக்கும் படை நிலை குழுவினர், மாநகரில் பல்வேறு பகுதிகளில் தீவிர சோத-னையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில், 32 பறக்கும் படை நிலை குழுவினர் அமைத்து சோதனை மேற்கொள்ள தேர்தல் அதிகாரி பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். இக்குழு-வினர், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனை பணியை மேற்கொண்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், துணை ராணுவத்-தினரோடு இணைந்து, பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு-வினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் கோரிமேடு பகு-தியில், நேற்று காலை ஏற்காட்டிற்கு சென்ற வாகனங்கள் மற்றும் அங்கிருந்து வரும் வாகனங்களை சோதனை செய்தனர். இதேபோல கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, சூரமங்-கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால், அதனை பறி-முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
