/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்நடை தீவனம் மாயம்: போலீசார் விசாரணை
/
கால்நடை தீவனம் மாயம்: போலீசார் விசாரணை
ADDED : நவ 19, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: கொளத்துார், பாலவாடியை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல், 32. இவருக்கு கடந்த, 15ல் புதுச்சேரியில் இருந்து, 7,500 ரூபாய் மதிப்-புள்ள, 50 கிலோ கால்நடை தீவன மூட்டை கூரியரில் மேட்டூர் வந்தது.
இந்த மூட்டையை அவர் இரவு, 10:15 மணிக்கு கொள்-ளேகால் செல்லும் அரசு பஸ்சில் ஏற்றி விட்டு பின்னால் பைக்கில் சென்றுள்ளார். மூட்டையை பாலவாடியில் நடத்துனர் இறக்கி விட்டு சென்றுள்ளார். ஆனால், சாலையோரம் போட்ட மூட்டை மாயமானது. நேற்று முன்தினம் சக்திவேல் கொடுத்த புகார்படி, கொளத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.

