ADDED : ஜூலை 16, 2026 01:28 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் தனியார் சார்பில், டீ உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. அங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையில் அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவு பொருட்களை, பிளாஸ்டிக் கவர்களில் விற்கக்கூடாது என அறிவுறுத்தி, பிளாஸ்டிக் கவர்களில் வைக்கப்பட்டிருந்த உணவு-களை பறிமுதல் செய்து, குப்பை தொட்டியில் போட்டனர். மாறாக உணவு பொருட்களை வாழை இலையில் வைத்து விற்க, வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
