/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழகத்தில் முதல்முறை சேலம் மத்திய சிறையில் பண்பலை தொடக்கம்
/
தமிழகத்தில் முதல்முறை சேலம் மத்திய சிறையில் பண்பலை தொடக்கம்
தமிழகத்தில் முதல்முறை சேலம் மத்திய சிறையில் பண்பலை தொடக்கம்
தமிழகத்தில் முதல்முறை சேலம் மத்திய சிறையில் பண்பலை தொடக்கம்
ADDED : அக் 25, 2024 07:09 AM
சேலம்: சேலம் மத்திய சிறையில், 700க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை சிறைத்துறை முன்னெடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி கைதிகள் தண்டனை முடிந்து திரும்பும்போது, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வழி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு தமிழகத்தில் முதல்முறையாக, 'சிறை பண்பலை' தொடங்கப்பட்டுள்ளது. அதை, சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வரர்தயாள் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, சிறை கண்காணிப்பாளர் வினோத் கூறுகையில், ''சிறைவாசிகளே, இந்த பண்பலையை நடத்துவதால் பல்வேறு மன அழுத்தங்கள் குறைவதோடு, தொழில், பாடல்களில் தனித்திறன் பெறுகின்றனர். பண்பலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதால் கைதிகளிடம் வரவேற்பு உள்ளது,'' என்றார்.