/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மனகசப்புகளை மறந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் இ.பி.எஸ்., நல்ல கூட்டணி அமைப்பார்: வேலுமணி

ADDED : அக் 15, 2024 07:33 AM
ஓமலுார்: ''சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ்., நல்ல கூட்டணி அமைப்பார்; கவலை வேண்டாம். மனகசப்புகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டும்,'' என, ஓமலுாரில் நடந்த, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
சேலம் புறநகர் மாவட்டம், ஓமலுார் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., ஓமலுார் மேற்கு ஒன்றியம், தாரமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம், நேற்று ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமையில் நடந்தது.சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: வரும் தேர்தலின் போது, திண்ணை பிரசாரம் முக்கியமானது. குடும்ப உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும். கிளை செயலர்கள் தான், அ.தி.மு.க., பேரியக்கத்தின் முதுகெலும்பு. கிளை செயலராக இ.பி.எஸ்., பணியாற்றி, தற்போது பொதுச்செயலராக உள்ளார்.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். கிளை செயலர்களுக்கு வசந்த காலம் வரும். இ.பி.எஸ்., ஆட்சியில் ஓமலுார் தொகுதியில் மட்டும், 500 கோடி ரூபாய்க்கு, தார் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியில் சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு, ஒரு கிலோ அரிசி விலை, 80 ரூபாய் என்பது உள்ளிட்ட பல்வேறு உயர்வால் மக்கள் துன்பப்படுகின்றனர். வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம் நடத்தி வெற்றி கண்டது. அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.