/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., முன்னாள் பஞ்., தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
அ.தி.மு.க., முன்னாள் பஞ்., தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
அ.தி.மு.க., முன்னாள் பஞ்., தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
அ.தி.மு.க., முன்னாள் பஞ்., தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜூலை 15, 2025 12:58 AM
இடைப்பாடி, அ.தி.மு.க.,வை சேர்ந்த, கோரணம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், நேற்று சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் செல்வகணபதி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார்.
கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், கோரணம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜ்குமார். அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், 2019 முதல் 2024ம் ஆண்டு வரை கோரணம்பட்டி ஊராட்சியின் தலைவராக இருந்தார். இந்நிலையில், நேற்று இடைப்பாடியில் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலரும், சேலம் எம்.பி.,யுமான செல்வகணபதியின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார். இவருடன் கோரணம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் செல்வகுமார், அ.தி.மு.க., ஊராட்சி ஐ.டி., விங்க் செயலர் மூர்த்தி, சண்முகம், மணிகண்டன் ஆகியோர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர்.