ADDED : மே 18, 2026 02:04 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், பெரிய கொல்லப்பட்டி காந்தி நகரில், கன்னங்குறிச்சி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த, 3 பேரை பிடித்து சோதனை செய்ததில், 1.1 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில் கோரிமேடு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த், 29, கொல்லப்பட்டி, அங்காளம்மன் கோவில் தெரு வெங்கடேஷ், 29, பிரவீன், 19, என்பதும், கஞ்சா விற்க முயன்றதும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.
