ADDED : செப் 05, 2026 04:54 AM
சேலம்; ஆட்டையாம்பட்டி, தானகுட்டிபாளையத்தை சேர்ந்த லோகநாதன் மகள் லத்திகா, 19. ஏற்காடு அடிவாரத்தில் உள்ள தனியார் பார்மஸி கல்லுா-ரியில், டி.பார்ம் 2ம் ஆண்டு படிக்கிறார். இரு நாட்-களுக்கு முன் கல்லுாரி சென்ற அவர், வீடு திரும்-பவில்லை. அவரது தாய் ஜோதி புகார்படி, ஆட்-டையாம்பட்டி போலீசார், மாணவியை தேடுகின்-றனர்.
சூரமங்கலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த சிவா மகள் ஆர்த்தி, 19. பிளஸ் 2 படித்துள்ள இவர், சமீபத்தில் வெளியே சென்ற பின் வீடு திரும்பவில்லை. அவரது தாய் கவுசல்யா புகார்-படி சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.கருப்பூரை சேர்ந்த வைரம் மகள் கோகிலா, 20. பி.எஸ்சி., முடித்த இவர், முதுகலை பயில, ஓம-லுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் விண்ணப்-பிக்க சென்றவர், வீட்டுக்கு வரவில்லை. இப்பு-கார்படி கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொண்டலாம்பட்டி அடுத்த ராக்கிப்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் ராஜேஷ், 17. மனநிலை பாதிக்கப்பட்ட இவர், கடந்த, 2ல் மாயமானார். இப்புகார்படி கொண்டலாம்பட்டி போலீசார் விசா-ரிக்கின்றனர்.
