ADDED : செப் 09, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
சேலம்:மேட்டூரை
சேர்ந்த, 30 வயது இன்ஜினியர், அதே பகுதியில் உள்ள தனியார்
நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கு சில நாட்களுக்கு முன், ஒரு
போன் அழைப்பு வந்தது.
அதில், 'கிரடிட் கார்டு வைத்திருந்த வங்கியில்
இருந்து பேசுகிறேன். உங்கள் கார்டு லிமிட்டை அதிகரித்து தருகிறேன்.
அதற்கு கார்டு எண், காலாவதி தேதி, ஓ.டி.பி., வேண்டும்' என கூறியுள்ளார்.
அவரும் அத்தகவல்களை தெரிவித்துள்ளார்.சிறிது நேரத்தில் அவர்
வங்கி கணக்கில் இருந்து, 1.28 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. அதிர்ச்சி
அடைந்த அவர், அழைப்பு வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து
வைக்கப்பட்டிருந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சேலம் மாவட்ட
சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நேற்று வழக்கு பதிந்து
விசாரிக்கின்றனர்.
