தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/615 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி

615 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி

615 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி


ADDED : ஜன 20, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார் அருகே, வடசென்னிமலையில் உள்ள, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவிய-ருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நேற்று நடந்-தது,

மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள், 615 பேருக்கு, தி.மு.க.,வை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.பி., மலைய-ரசன் மடிக்கணினிகளை வழங்கி பேசுகையில்,''மூன்றாம் ஆண்டு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் ரஞ்சித், தனது தந்தை உத-வியுடன் தினமும் கல்லுாரிக்கு வந்து செல்வதாகவும், மாற்றுத்திற-னாளிக்கான மூன்று சக்கர மொபட் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்ததை சமூக வலைத்தளத்தில் பார்த்தேன். மாவட்ட கலெக்டரிடம், இதுதொடர்பாக தெரிவித்துள்ளதால், விரைவில் மாணவர் ரஞ்சித்திற்கு வாகனம் கிடைப்பதற்கு நடவ-டிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

கல்லுாரி முதல்வர் ரவீந்திரன், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us