தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/அணை நீர்வரத்து மேலும் உயர்வு

அணை நீர்வரத்து மேலும் உயர்வு

அணை நீர்வரத்து மேலும் உயர்வு


ADDED : நவ 29, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 25ல் அணைக்கு வினாடிக்கு, 587 கனஅடி நீர் வந்தது. பாசனத்துக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்ததால், 25ல், 61.30 அடியாக இருந்த நீர்மட்டம், 26ல், 61.25 அடியாக சரிந்தது. சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் வடகிழக்கு பருவமழையால், நேற்று முன்தினம், 2,878 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 3,422 கனஅடியாக மேலும் அதிகரித்தது. தற்போது திறப்பை விட வரத்து கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 61.45 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 61.71 அடியாக அதிகரித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us