/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெருமாள் கோவில்களில் 'கஜேந்திர மோட்ச' வைபவம்
/
பெருமாள் கோவில்களில் 'கஜேந்திர மோட்ச' வைபவம்
ADDED : மே 13, 2025 02:07 AM
சேலம்:சித்ரா பவுர்ணமியான நேற்று, பெருமாள் கோவில்களில் 'கஜேந்திரன்' என்ற யானையை முதலையிடம் இருந்து விடுவித்து மோட்சம் கொடுத்த வைபவம் நடந்தது.
சித்திரை மாத பவுர்ணமி நாளில்தான், முதலையிடம் மாட்டிக்கொண்ட கஜேந்திரன் என்ற யானை கோவிந்தா கோவிந்தா என அழைத்தவுடன், பெருமாள் தன் சக்ராயுதத்தை பிரயோகித்து யானைக்கு மோட்சம் அளித்தார் என புராணங்களில் உள்ளது.
இதை நினைவு கூறும் வகையில், சேலம் அம்மா பேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமியான நேற்று, உற்சவர் சவுந்தரராஜருக்கு பலவித பொருட்களால் அபி ேஷகம் செய்து, சர்வ அலங்காரத்துடன் மாலை 5:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 7:00 மணிக்கு கோவிலில் 'கஜேந்திர மோட்சம்' வைபவம் நடந்து, பிரபந்த சேவையுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கருடசேவையில் பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் பொன்னம்மாபேட்டை மன்னார்பாளையம் பிரிவில் உள்ள, லட்சுமி நரசிம்மர் கோவிலிலும் சித்ரா பவுர்ணமியையொட்டி, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 'கஜேந்திர மோட்ச' வைபவம் நடத்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
சேலம் பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் நடந்து வரும் ஸ்ரீராமநவமி உற்சவத்தின் 7ம் நாளான நேற்று, கஜ வாகனத்தில் ராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.