/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் விரித்த வலையில் சிக்கிய கஞ்சா வியாபாரி
/
போலீஸ் விரித்த வலையில் சிக்கிய கஞ்சா வியாபாரி
ADDED : ஜூலை 21, 2025 04:19 AM
வாழப்பாடி: வாழப்பாடி ரயில்வே கேட் பின்புறம், கஞ்சா விற்க முயன்ற, ஒடிசாவை சேர்ந்த தேஜாராஜா புட்டல், 26, சுபராஜ் மெகர், 27, ஆகியோரை, வாழப்பாடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களிடம், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 21.6 கிலோ கஞ்-சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்த பின், திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணி-யாற்றும், ஒடிசாவை சேர்ந்த ராஜகுமார ராணா, 26, என்பவரை, நேற்று, வாழப்பாடியில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறிய
தாவது:
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த, 2 பேரை கைது செய்து விசாரித்ததில், திருப்பூரில் உள்ள அவரது நண்பர் ராஜகுமார ராணாவிடம், கஞ்சா வினியோகித்து வந்தது தெரிந்தது.
ராஜ்குமார ராணா, சேலம், திருப்பூரில் போலீஸ் சோதனை அதிகம் உள்ளதால், சேலம் அருகே வாழப்பாடியில் கஞ்சா கொண்டு வந்து தரும்படி தெரிவித்துள்ளார். அதன்படி வாழப்-பாடி வந்தபோது தான், ஒடிசாவை சேர்ந்த இருவரும் சிக்கினர். இவர்கள் மூலம், ராணாவை வாழப்பாடிக்கு வரவழைத்தோம்.
அவரும் கஞ்சா வாங்க, வாழப்பாடி ரயில்வே கேட்டுக்கு வந்-ததால், அவரையும் கைது செய்தோம். அவரிடம், 1.250 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

