/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கஞ்சா, ஹான்ஸ், குட்கா பறிமுதல் பெண் உள்பட 8 பேருக்கு காப்பு
/
கஞ்சா, ஹான்ஸ், குட்கா பறிமுதல் பெண் உள்பட 8 பேருக்கு காப்பு
கஞ்சா, ஹான்ஸ், குட்கா பறிமுதல் பெண் உள்பட 8 பேருக்கு காப்பு
கஞ்சா, ஹான்ஸ், குட்கா பறிமுதல் பெண் உள்பட 8 பேருக்கு காப்பு
ADDED : ஜூன் 30, 2025 04:44 AM
சேலம்: சேலம் மாநகரில், கஞ்சா உட்பட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பெண் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் அன்னதானப்பட்டி போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மூலப்பிள்ளையார், நாகாத்தம்மன் கோவில் பகுதியில், சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வாலிபரிடம் சோதனையிட்டதில், அவர் வைத்திருந்த பையில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர், சேலம் செவ்வாய்பேட்டை, அக்ரஹாரத்தை சேர்ந்த உஜ்வீர்சிங், 26, என்பது தெரிந்தது. அவரது வாக்குமூலத்தின்படி, வீடு உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்திருந்த, 400 கிலோ குட்கா உள்ளிட்ட பான்மசால் பொருட்கள் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர். பறிமுதல் செய்த குட்கா பொருட்களின் மதிப்பு, 3.03 லட்ச ரூபாய்.
மேலும், அன்னதானப்பட்டி மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே, 11 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மல்லுார், திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த தினகரன், 20, தரணிதரண், 19, மோகன், 20, ஆகிய மூவரை கைது செய்தனர். அதேபோல, அம்மாபேட்டை போலீசார், 5.893 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அம்மாபேட்டை, கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த சுகந்தி, 44, கிருஷ்ணன்புதுார் தெருவை சேர்ந்த ஆனந்த், 24, பூபதி, 33, ஆகிய மூவரையும் கைது செய்தனர். கருப்பூர் போலீசார், ஒரு கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்து, ஓமலுார் அருகே மூங்கில்பாடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன், 77, என்பவரை கைது செய்தனர்.