ADDED : ஏப் 18, 2026 05:35 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், பச்சப்பட்டியை சேர்ந்தவர் அகமது பாட்ஷா, 23. இவரை திருட்டு வழக்கில்
அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது, 9 வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் அக-மது பாட்ஷாவை, நேற்று முன்தினம் போலீசார், சேலம் மத்திய சிறையில் இருந்து, சேலம் நீதி-மன்றத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஆஜர்-படுத்திய பின், மீண்டும் சிறைக்கு அழைத்து வந்-தனர்.
அகமது பாட்ஷாவை சோதனை செய்த போது, ஆசனவாயில் மூலம் பேட்டரியுடன் கூடிய பட்டன் மொபைல் போன், 12 கிராம் கஞ்சா கொண்டு வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரித்ததில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷ் கடத்தி வர சொன்னது தெரிந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரிக்-கின்றனர்.
