/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குப்பையால் துர்நாற்றம்; சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
/
குப்பையால் துர்நாற்றம்; சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
குப்பையால் துர்நாற்றம்; சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
குப்பையால் துர்நாற்றம்; சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
ADDED : டிச 23, 2024 10:21 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து காந்தி நகர் மயானத்தின் ஒரு பகுதியில், குப்பை மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதன் வடக்கே அங்கன்வாடி மையம், வீடுகள் உள்ளன. தெற்கே ரேஷன் கடை, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், குரும்பர் தெரு, நத்தமேடு சாலை செல்கின்றன. மழை காலங்களில் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
தெருநாய்கள், குப்பையில் கிடக்கும் செத்த எலி, பூனை, நாய் உள்ளிட்டவையின் உடல்களை, வீடுகள் அருகே இழுத்து வந்து உண்கின்றன. அதனால் நோய் தொற்று பரவும் ஆபத்து உள்ளது. அந்த வழியே செல்லும் மக்கள், மூக்கை பிடித்தபடியே சென்று வரும் நிலை உள்ளது. அதனால் குப்பை கிடங்கை சுற்றி, உயரமாக சுற்றுச்சுவர் கட்ட, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.