/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேம்பால பகுதியில் கொட்டப்படும் குப்பை
/
மேம்பால பகுதியில் கொட்டப்படும் குப்பை
ADDED : மே 30, 2024 01:32 AM
ஆத்துார், ஆத்துார், கோட்டை மற்றும் புறவழிச்சாலைக்கு செல்லும்படி, வசிஷ்ட நதி குறுக்கே, மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் இருபுறமும், குப்பை, இறைச்சி, கட்டடம் உள்பட பல்வேறு கழிவு கொட்டப்பட்டு வருகின்றன. சிலர் குப்பைக்கு தீ வைத்தும் எரிக்கின்றனர். குப்பையை நாய் உள்ளிட்ட கால்நடைகள் கிளறி விடுவதால் துர்நாற்றமும் வீசுகிறது. சுகாதார சீர்கேட்டு ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'நீர் நிலை பகுதிகளில் குப்பை கொட்ட வேண்டாம் என பலமுறை எச்சரித்துள்ளோம். ஆனால் மீறி சிலர் குப்பை கொட்டி வருகின்றனர். சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.