ADDED : டிச 12, 2025 08:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: மகாகவி சுப்ரமணிய பாரதியாரின், 143வது பிறந்த நாளை ஒட்டி, பா.ஜ.,வின், சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் நேற்று, சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் சசிகுமார், மாநில சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் கோபிநாத், நெசவாளர் பிரிவு தலைவர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். த.மா.கா., சார்பில், மாநகர மாவட்ட தலைவர் உலக நம்பி தலைமையில், மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், மாலை அணிவித்தார்.

