/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காஸ் ஆலை ஒப்பந்த தொழிலாளர் 7ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
/
காஸ் ஆலை ஒப்பந்த தொழிலாளர் 7ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
காஸ் ஆலை ஒப்பந்த தொழிலாளர் 7ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
காஸ் ஆலை ஒப்பந்த தொழிலாளர் 7ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 15, 2024 10:23 AM
ஓமலுார்: சேலம், கருப்பூரில், 'இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் சமையல் காஸ் நிரப்பும் ஆலை உள்ளது. அங்கிருந்து விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு காஸ் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிலிண்டர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட, 65 ஒப்பந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தில் இணைந்தனர்.
இதனால் ஆலை நிர்வாகத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடையே சுமுக சூழல் ஏற்படவில்லை. கடந்த, 8ல் ஒப்பந்த தொழிலாளர்களை, பணிக்கு அனுமதிக்க முடியாது என, அதன் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. தொடர்ந்து வேறு பணியாளர்கள் மூலம், ஆலையில் பணி நடக்கிறது. பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், மீண்டும் வேலை கேட்டு, நேற்று, 7ம் நாளாக, ஆலை முன், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'நிர்வாகம் இதுவரை பேச்சுக்கு அழைக்கவில்லை. இதுகுறித்து சேலம் மாவட்ட தொழிலாளர் நலத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அனுபவமற்ற பணியாளர்களால் வேலை நடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என்றனர்.

