/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அபூர்வா பட்டுக்கு புவிசார் குறியீடு: அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி உறுதி
/
அபூர்வா பட்டுக்கு புவிசார் குறியீடு: அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி உறுதி
அபூர்வா பட்டுக்கு புவிசார் குறியீடு: அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி உறுதி
அபூர்வா பட்டுக்கு புவிசார் குறியீடு: அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி உறுதி
ADDED : ஏப் 16, 2024 07:19 AM
ராசிபுரம் : நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, சங்ககிரி சட்டசபை தொகுதியில், மகுடஞ்சாவடி, தாரமங்கலம் ஒன்றியங்களிலும், இடங்கணசாலை நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஹா தமிழ்மணி, இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: மகுடஞ்சாவடி, இடங்கணசாலை, தாரமங்கலம் ஒன்றிய பகுதிகளில் தறித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு, விசைத்தறியில் தனிச்சிறப்புடன் தரமான அபூர்வா பட்டு புடவை உற்பத்தி செய்யப்படுகிறது. அபூர்வா பட்டு புடவைகளுக்கு புவிசார் குறியீடு வாங்கி கொடுத்து, சூரத்தில் இருந்து வரும் போலியான புடவைகளுக்கு தடை விதிக்க பார்லி மென்ட்டில் குரல் கொடுப்பேன். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த, 'அம்மா' மினி கிளினிக், 'அம்மா' உணவகம், தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை முடக்கி நாட்டு மக்களை, தி.மு.க., அரசு ஏமாற்றி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, ராஹா தமிழ்மணிக்கு பெண்கள் ஆரத்தி, எடுத்தும் மலர் துாவியும், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர்.சங்ககிரி எம்.எல்.ஏ., சுந்தரராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா, தாரமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் காங்கேயன், இடங்கணசாலை நகர செயலாளர் சிவலிங்கம், சேலம் புறநகர் மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வினோத், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சவுந்தர்ராஜன், சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர் பைபாஸ் செல்வகுமார், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சுரேஷ் பாபு, தே.மு.தி.க., மாவட்ட பொருளாளர் தங்கமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

