ADDED : ஆக 23, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த ஜூலை,
21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பொங்கல் வைத்தல்,
தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
தவிர தினமும் அம்மன், விதவித
வாகனங்களில் திருவீதி உலா வந்தார். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக,
ஆடித்திருவிழா நிறைவாக உற்சவர் அம்மனுக்கு நெய் அபிேஷகம் நேற்று
நடந்தது. இதற்கு உற்சவர் அம்மனை பல வண்ண பூக்களால்
அலங்கரிக்கப்பட்ட மேடையில் எழுந்தருள செய்து, குடம் குடமாக, 500
லிட்டர் நெய் யால் அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
அனைவருக்கும் அபிேஷக நெய் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று மகா
அபிேஷகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
