/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமிக்கு குழந்தை பிறந்தது சிறுவன் மீது போக்சோ வழக்கு
/
சிறுமிக்கு குழந்தை பிறந்தது சிறுவன் மீது போக்சோ வழக்கு
சிறுமிக்கு குழந்தை பிறந்தது சிறுவன் மீது போக்சோ வழக்கு
சிறுமிக்கு குழந்தை பிறந்தது சிறுவன் மீது போக்சோ வழக்கு
ADDED : அக் 22, 2024 07:22 AM
ஆத்துார்: சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில், 17 வயது சிறுவன் மீது, போலீசார் போக்சோ
வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, வீரகனுாரை சேர்ந்தவர், 17 வயது சிறுமி.
இவரது பெற்றோர் பிரிந்து வாழ்ந்த நிலையில், மூன்று ஆண்டுக்கு முன் தாய் இறந்த பின்,
பாட்டி வீட்டில் வசித்து வந்தார். பிளஸ் 2 முடித்த இவர், ஒரே பள்ளியில் படித்த,
கெங்கவல்லியை சேர்ந்த, 17 வயதுடைய சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த பிப்., 5ல், திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமி-யுடன், சிறுவன்
தனிமையில் இருந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்ப-மானர். அதன்பின் கடந்த, 11ல்,
கர்ப்பமாக இருந்த சிறுமியை, சிறுவன் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமி கர்ப்பமாக
இருந்ததால், சிறுவனின் பெற்றோர் ஆதரவு கொடுத்துள்ளனர். கடந்த, 14ல், பிரசவ வலி
ஏற்பட்டபோது, கெங்கவல்லி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்
வழியில், பெண் குழந்தை பிறந்துள்ளது. தனியார் மருத்துவம-னையில் சிறுமி, அவரது
குழந்தையுடன் சிகிச்சை பெற்று வரு-கிறார். தகவலறிந்த ஆத்துார் மகளிர் போலீசார், 17
வயது சிறு-மியை கர்ப்பமாக்கிய, 17 வயது சிறுவன் மீது, நேற்று முன்தினம் போக்சோ
வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்-றனர்.