தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மருத்துவர்கள் மீது தாக்கு தோழியின் காதலன் கைது

மருத்துவர்கள் மீது தாக்கு தோழியின் காதலன் கைது

மருத்துவர்கள் மீது தாக்கு தோழியின் காதலன் கைது


ADDED : பிப் 20, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேந்தவர் நித்தீஷ், 27. இவரது நண்பர், திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த மோகன், 29. இரு-வரும் மருத்துவர்கள். நித்தீஷ், சேலத்தில் உள்ள காதலியை பார்க்க, நேற்று முன்தினம் மோக-னுடன், சேலம் வந்தார். இருவரும் அரியானுாரில் நின்றனர். அப்போது நித்தீஷ், காதலிக்கு போன் செய்து, ஏற்காடு அழைத்தார். வரும்போது தோழியை அழைத்து வர அறிவுறுத்தினார்.

இந்நிலையில் தோழியின் காதலனான ஹரி-ஹரன் உள்பட, 3 பேர் அங்கு வந்தனர். தொடர்ந்து ஹரிஹரன், 'என் காதலியை எதற்கு ஏற்காடு அழைத்தாய்' என, நித்தீஷிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் உள்பட, 3 பேர், இரும்பு கம்பியால் நித்தீஷ், மோகனை சரமாரியாக தாக்கினர். படுகாயம் அடைந்த இருவரையும், மக்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நித்தீஷ் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து, ஹரிஹரன், அவரது நண்பர்கள் விஜய், கிருபா மீது வழக்குப்பதிந்தனர். ஹரிஹ-ரனை கைது செய்து, மற்றவர்களை தேடுகின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us