/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொங்கல் பண்டிகை எதிரொலி களைகட்டிய ஆடு விற்பனை
/
பொங்கல் பண்டிகை எதிரொலி களைகட்டிய ஆடு விற்பனை
ADDED : ஜன 05, 2025 12:40 AM
இடைப்பாடி:அய்யப்ப சீசனால், சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் சந்தைக்கு, சில வாரங்களாக ஆடுகள் வரத்து, விற்பனை குறைவாக இருந்தது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர்.
கடந்த வாரம், 2,900 ஆடுகள் கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று, 3,850 ஆடுகளை, வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்தனர். அதற்கேற்ப விலையும், 300 ரூபாய் வரை அதிகரித்து, 10 கிலோ ஆடு, 7,350 முதல், 7,950 ரூபாய் வரை விலைபோனது. இதன் வாயிலாக, 3.05 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
சேலம் மாவட்ட ஆடு வியாபாரிகள் சங்க தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், “அய்யப்ப சீசன் முடிந்து வருவதால், சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. தைப்பூசத்துக்கு பின் ஆடு விற்பனை மேலும் அதிகரிக்கும்,” என்றார்.
பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அனைத்து சந்தைகளிலும் ஆடு விற்பனை களைகட்டும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.