தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பிரதமர் மோடி பிறந்த நாளில் தங்க ரதம் இழுத்த பா.ஜ.,வினர்

பிரதமர் மோடி பிறந்த நாளில் தங்க ரதம் இழுத்த பா.ஜ.,வினர்

பிரதமர் மோடி பிறந்த நாளில் தங்க ரதம் இழுத்த பா.ஜ.,வினர்


ADDED : செப் 18, 2026 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி, சேலத்தில் பா.ஜ., சார்பில், 'சேவா சங்கல்ப் அபியான் -2026' பெயரில், ஒரு மாதம் பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று, மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில், பா.ஜ.,வினர், 1,008 ஆசிர்வாத தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து, மாரியம்மன் தங்க தேரை இழுத்து கோவிலை, 3 முறை வலம் வந்தனர். பின், 'மோடி பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்' என, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாவட்ட பார்வையாளர் முருகேசன், பொதுச்செயலர்கள் பிரபாகரன், செந்தில்குமார், ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் சென்னகேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல் பனமரத்துப்பட்டியில் பா.ஜ., சார்பில் ஒன்றிய தலைவி நிர்மலா தலைமையில் கொண்டாடப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் பேசினார். தொடர்ந்து, 'பாரம்பரிய பெருமை; மிளிரும் உன்னத வளர்ச்சி' புத்தகம், இனிப்பு, மக்களுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட செயலர் கந்தசாமி, விளையாட்டு பிரிவு தலைவர் தமிழ்நேசன், உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us