/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உள்ளூர் சந்தையில் ரோஜாவிற்கு நல்ல விலை வெளிநாடுகளுக்கு 18 லட்சம் மலர்களே ஏற்றுமதி
/
உள்ளூர் சந்தையில் ரோஜாவிற்கு நல்ல விலை வெளிநாடுகளுக்கு 18 லட்சம் மலர்களே ஏற்றுமதி
உள்ளூர் சந்தையில் ரோஜாவிற்கு நல்ல விலை வெளிநாடுகளுக்கு 18 லட்சம் மலர்களே ஏற்றுமதி
உள்ளூர் சந்தையில் ரோஜாவிற்கு நல்ல விலை வெளிநாடுகளுக்கு 18 லட்சம் மலர்களே ஏற்றுமதி
ADDED : பிப் 11, 2025 07:35 AM
ஓசூர்: ஓசூர் ரோஜாக்களுக்கு, உள்ளூர் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் நிலையில், இந்தாண்டு காதலர் தினத்திற்கு, 18 லட்சம் ரோஜாக்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியா-கின.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்று வட்டாரத்தில், 1,600 ஏக்-கரில் பசுமை குடில்கள் அமைத்து,
தாஜ்மகால், பர்ஸ்ட் ரெட், அவலாஞ்சி, நோப்லஸ், கார்வெட், கோல்ட் ஸ்டிரைக் போன்ற ரோஜா வகைகளை
விவசாயிகள், விரும்பி சாகுபடி செய்து வரு-கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்கு
வெளிநாடுக-ளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதியாகும். குறிப்பாக, தாஜ்மகால் மலர்கள் அதிகளவில்
ஏற்றுமதி செய்யப்படும். இந்தாண்டு ரோஜா செடிகளில் டவுனியா மற்றும் பூஞ்சை நோய்
தாக்குதலால் உற்பத்தி பெருமளவு பாதித்தது. வரத்து குறைந்து உள்ளூர் சந்தை-களில் விலை உயர
துவங்கியது. இம்மாதம் முகூர்த்த நாட்கள் அதிகளவில் வருவதால், கடந்த, 10 நாட்களுக்கு மேலாக
ஒரு ரோஜா அதிகபட்சமாக, 16 முதல், 22 ரூபாய் வரை விற்பனையா-கிறது. அதனால், வெளிநாடு
ஏற்றுமதியில் விவசாயிகள் நாட்டம் காட்டவில்லை. எனவே, நடப்பாண்டு காதலர் தினத்திற்கு
வெளி-நாடு ஏற்றுமதி, வெகுவாக குறைந்துள்ளது.இது குறித்து, தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் பாலசி-வப்பிரசாத் கூறியதாவது:கடந்தாண்டு காதலர் தினத்திற்கு, 40 லட்சம் ரோஜாக்கள் ஏற்று-மதியாகின. இந்தாண்டு சிங்கப்பூர்,
மலேசியா, இலங்கை, மாலத்-தீவு, ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு மொத்தம், 18 லட்சம்
ரோஜாக்கள் மட்டுமே ஏற்றுமதியாகி உள்ளன. உள்ளூர் சந்தையில் ஒரு ரோஜாவின் விலை, 16 முதல்,
22 ரூபாய் வரையும், வெளிநாடுகளுக்கு, 18 முதல், 22 ரூபாய் வரையும், விவசாயிகளிடமிருந்து
வியாபாரிகளால் வாங்கப்பட்டது. பெங்க-ளூரு ஏல மையத்தில் நேற்று, ஒரு தாஜ்மகால் ரோஜா
உள்ளூர் சந்தை தேவைக்காக, 26 ரூபாய் வரை வாங்கப்பட்டது. அதேபோல், காதலர் தினத்தையொட்டி,
ஆன்லைனில் மலர் விற்-பனை செய்யும், 40 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், வியாபாரிக-ளிடம் ஒரு
கோடி மலர்கள் வரை வாங்க, ஆர்டர் கொடுத்துள்-ளன. முகூர்த்த நாட்கள் அதிகமாக வருவதால், உள்ளூர்
சந்-தையில் நல்ல விலை கிடைக்கிறது. அதனால் வெளிநாடு ஏற்று-மதி பெருமளவு குறைந்துள்ளது.கொலம்பியாவில் இருந்து கடந்த, 3 மாதங்களுக்கு முன், 700 பதப்படுத்தப்பட்ட ரோஜாக்கள் தமிழகம்
வந்தது. அது கடந்த, 15 நாட்களுக்கு முன் தான், சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே
சென்றுள்ளது. அது ஒரு ரோஜா, 1,000 முதல், 5,000 ரூபாய் வரை விற்பனையாகும். அதனால், ஓசூர்
விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. நேற்றுடன் காதலர் தின ஏற்றுமதி நிறைவடைந்-தது.இவ்வாறு, அவர் கூறினார்.