ADDED : நவ 26, 2026 02:05 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் சுந்தர் தெருவை சேர்ந்தவர் சதீஷ், 36. இவர் கடந்த, 3ல் கூட்டாளியுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த ஜீவா என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, ரூ.10,000, தங்க மோதிரத்தை பறிக்க முயன்ற வழக்கில், கிச்சிப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது அதே மாதத்தில் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், ஒரு வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 கொலை வழக்குகளில் கைதானதும், 4 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிக்கியதும் தெரிந்தது. இதனால் அவரை, மீண்டும் குண்டாஸில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் பாபு, நேற்று உத்தரவிட்டார்.
