/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2ம் நாளாக அரசு மருத்துவர்கள் போராட்டம்
/
2ம் நாளாக அரசு மருத்துவர்கள் போராட்டம்
ADDED : நவ 27, 2024 06:44 AM
சேலம்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் முதல், போராட்டம் நடக்கிறது. அதன்படி சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், 2ம் நாளாக நேற்று, முக்கிய கூட்டங்களை புறக்கணிப்பது, அறிக்கை அனுப்புவது உள்ளிட்ட பணிகளை புறக்கணித்தனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர் சங்கத்தலைவர் அருணாசலம் கூறியதாவது: சமீபத்தில் நடந்த சுகாதார கூட்டத்தில், அரசு மருத்துவர்களை, உயர் அதிகாரிகள் மிக தரக்குறைவாக நடத்தினர். ஒரு கர்ப்பிணி உயிரிழந்தால், மகப்பேறு மருத்துவர்களை மிரட்டுகின்றனர். வளர்ந்த நாடுகளில் கூட, மகப்பேறு இறப்பு நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் அரசு அதிகாரிகள், மருத்துவர்களை மிரட்டி வருகின்றனர். இதை கண்டித்து சேலம் அரசு மருத்துவமனையில், 350க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தாலுகா, மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 1,000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள், 2ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தவிர காலியாக உள்ள மருத்துவர், செவிலியர் பணியிடங்களை நிரப்பவும், போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். செயலர் ஜெயக்குமார், பொருளாளர் தீபன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.