தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அரசு பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாட்டம்

அரசு பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாட்டம்

அரசு பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாட்டம்


ADDED : ஆக 19, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி:இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 1926ல் தொடங்கப்பட்டது. அப்பள்ளியில், 1990 முதல், 1995 வரை படித்த முன்னாள் மாணவர்கள், 'ஹானர் பாய்ஸ் ஆப் இடைப்பாடி' பெயரில் மன்றம் தொடங்கியுள்ளனர். அவர்கள் சார்பில் பள்ளி நுாற்றாண்டு விழா, மன்றத்தினர் பொறுப்பேற்பு விழா, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, இடைப்பாடியில் நேற்று நடந்தது.

இதற்கு, அப்பள்ளி வளாகத்தில் இருந்து கோட் சூட் அணிந்தபடி, மேளதாளம் முழங்க ஊர்வலமாக, மண்டபத்துக்கு வந்தனர். பின் மன்ற நிர்வாகிகள் எப்படி செயல்பட வேண்டும் என ஆலோசித்தனர். தொடர்ந்து பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். இடைப்பாடி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அரசு, தனியார் பள்ளிகளில் படித்து இறுதியாண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை,

நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us