ADDED : அக் 28, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் பார்கவி, 25. கல்லுாரி படிப்பை முடித்துள்ளார். கடந்த, 23ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற பார்கவி மீண்டும் திரும்பவில்லை. உறவினர்கள், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து நேற்று முன்தினம் அன்னதானப்பட்டி போலீசில், பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
* சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுமி கடந்த, 23ல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர் அளித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

