/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தானிய வள வேளாண் திட்டம்:100 விவசாயிகளுக்கு விளக்கம்
/
தானிய வள வேளாண் திட்டம்:100 விவசாயிகளுக்கு விளக்கம்
தானிய வள வேளாண் திட்டம்:100 விவசாயிகளுக்கு விளக்கம்
தானிய வள வேளாண் திட்டம்:100 விவசாயிகளுக்கு விளக்கம்
ADDED : அக் 12, 2025 01:49 AM
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், பிரதம மந்திரி தானிய வள வேளாண் திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. அதில் சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், வேளாண் கண்காணிப்பு பொறியாளர் குமரன் ஆகியோர், திட்டம் குறித்து விளக்கினர்.
குறிப்பாக உற்பத்தி திறனை அதிகரித்தல், நீடித்த நிலையான வேளாண் உத்தி, அறுவடை பின்செய் நேர்த்தி மற்றும் மதிப்பு கூட்டுதல், பாசன வசதிகளை மேம்படுத்தல், உயர் விளைச்சல் ரகங்களை உருவாக்குதல், பயறு வகை சாகுபடி பரப்பை அதிகரித்தல், துவரை, உளுந்து கொள்முதலுக்கு உத்தரவாதம் அளித்தல் குறித்து, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் நாகராஜன், அட்மா குழு தலைவர் சந்திரசேகரன், துணை வேளாண் அலுவலர் ராமு, வீரபாண்டி, சேலம், பனமரத்துப்பட்டி ஒன்றியங்களை சேர்ந்த, 100
விவசாயிகள் பங்கேற்றனர்.