ADDED : அக் 09, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாவட்டத்தில், கடந்த, 2ல் காந்தி ஜெயந்தியையொட்டி நடக்கவிருந்த கிராமசபா கூட்டம், வரும், 11ல் நடக்க உள்ளது.
அதில் ஊராட்சி மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சி தணிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தல், கொசு மூலம் பரவும் டெங்கு தடுப்பு நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதி உள்பட அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்பதால், மக்கள் கிராமசபா கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.