ADDED : ஜூன் 06, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி; சங்ககிரி ஆர்.டி.ஓ., கேந்திரியா, நேற்று, இடைப்-பாடி, ஆவணியூர் புறவழிச்
சாலையில் சென்றபோது, வீடு கட்ட பயன்படுத்-தப்படும், 'சைஸ்' கிரானைட் கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்தார்.
அப்போது வெள்ளார் பகுதியை சேர்ந்த கந்தசாமிக்கு சொந்தமான டிப்பர் லாரியை, நங்கவள்-ளியை சேர்ந்த பாரிமோகன் ஓட்டி வந்ததும், வன-வாசியில் கற்களை ஏற்றிக்கொண்டு, இடைப்பா-டியில் உள்ளவருக்கு விற்க கொண்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து கற்களுடன் லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இடைப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
