/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிராபீன் தயாரிப்பு இயந்திரம்; பெரியார் பல்கலையில் அறிமுகம்
/
கிராபீன் தயாரிப்பு இயந்திரம்; பெரியார் பல்கலையில் அறிமுகம்
கிராபீன் தயாரிப்பு இயந்திரம்; பெரியார் பல்கலையில் அறிமுகம்
கிராபீன் தயாரிப்பு இயந்திரம்; பெரியார் பல்கலையில் அறிமுகம்
ADDED : அக் 11, 2024 07:06 AM
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ், அவரது ஆராய்ச்சி மாணவர்கள் ஸ்டான்லி தினகரன், விஜயன் ஆகியோர், கழிவு பொருள்களில் இருந்து, 'கிராபீன்' தயாரிக்க கூடிய, கழிவு மேலாண் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், ''கிராபீன் இரும்பை விட, 200 மடங்கு வலுவானது. அலுமினியத்தை விட, 4 மடங்கு லோசானது. இவை தற்போது அமெரிக்காவில் மட்டும் தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ கிராபீன் விலை, 80,000 முதல், 2 லட்சம் ரூபாய். விமான பாகங்கள், மொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல வகைகளில் பயன்படுத்த முடியும்,'' என்றார்.
அந்த இயந்திரத்தை துணைவேந்தர் ஜெகநாதன் நேற்று அறிமுகப்படுத்திய பின் கூறுகையில், ''நாட்டில் முதல்முறையாக நம் பல்கலையில் தயாரிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனை. தற்போது ஒரு கிராம் மட்டும் தயாரிக்கக்கூடியபடி உள்ளது. விரைவில் கூடுதலாக கிராபீன் தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். தொடர்ந்து அந்த இயந்திரத்தை தயாரித்த ஆசிரியர், மாணவர்களை பாராட்டினார்.