sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'பசுமை இயக்கத்தில் 8 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு'

/

'பசுமை இயக்கத்தில் 8 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு'

'பசுமை இயக்கத்தில் 8 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு'

'பசுமை இயக்கத்தில் 8 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு'


ADDED : செப் 25, 2025 02:08 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,:தமிழ்நாடு பசுமை இயக்க, 3ம் ஆண்டு தொடக்க தினத்தையொட்டி, வனத்துறை சார்பில், சேலம் அரசு சட்டக்கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் பணியை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில், 1,331 சதுர கி.மீ., பசுமை பரப்பளவாக உள்ளது. இது மொத்த பரப்பளவில், 28 சதவீதம். இதை, 33 சதவீதமாக உயர்த்த, நடப்பாண்டு நாவல், புங்கன், கொடுக்காப்புளி, பரம்பை, மகோகனி, பூவரசு, பலா, அத்தி, தேக்கு, சில்வர் ஓக், மலைவேம்பு உள்ளிட்ட இனங்களில், 8,23,700 மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது முதல் அனைத்து அரசுத்துறைகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சுற்றுச்சூழல், மரங்கள் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அமைச்சர், பரிசு வழங்கினார். கலெக்டர் பிருந்தாதேவி, மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி, கல்லுாரி முதல்வர் துர்காலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஏற்காட்டில் வனச்சரக அலுவலர் முருகன் தலைமையில், தோட்டக்கலை துறைக்கு சொந்தமான ரோஜா தோட்டத்தில், 125 நாவல் மரக்கன்றுகள் நடப்பட்டன. பி.டி.ஓ., பழனிசாமி, தி.மு.க., ஒன்றிய செயலர் ராஜேந்திரன், வனம், தோட்டக்கலை அலுவலர்கள், அரசியல் கட்சியினர், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தொடந்து ஏற்காடு முழுதும் பொது இடங்கள், பள்ளி வளாகங்கள் உள்பட, 62 இடங்களில், 10,000 நாவல் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக, பழனிசாமி தெரிவித்தார்.

சங்ககிரி சமூக காடுகள் வனச்சரகம், சங்ககிரி சமூக நல அறக்கட்டளை இணைந்து, கோட்டவரதம்பட்டி ஊராட்சி ஒருக்காமலை அடிவாரத்தில், சங்ககிரி வனச்சரக அலுவலர் பழனிவேல் தலைமையில், 602 மரக்கன்றுகள் நடப்பட்டன.

அதேபோல் மேட்டூர் வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையில், அங்குள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரி வளாகத்தில், 25 நாவல் மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லுாரி முதல்வர் திருப்பதி, வனவர்கள், மாணவ, மாணவியர், மேட்டூர் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us