/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நண்பர்கள் தினத்தை ஒட்டி வாழ்த்து பட்டை விற்பனை
/
நண்பர்கள் தினத்தை ஒட்டி வாழ்த்து பட்டை விற்பனை
ADDED : ஆக 03, 2025 01:14 AM
சேலம், ஆகஸ்ட் முதல் ஞாயிறு, சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று கொண்டாடப்படுவதால், சேலத்தில் வாழ்த்து பட்டை(ப்ரண்ட்ஷிப் பேன்ட்) விற்பனை நேற்று நடந்தது.
இதுகுறித்து, செவ்வாய்ப்பேட்டை வியாபாரி ராம்தேவ், 40, கூறியதாவது: ஒரு மாதத்துக்கு முன்பே, 500க்கும் மேற்பட்ட விதவித பேன்ட்கள் குவிக்கப்பட்டன. 10 ஆண்டுக்கு முன் வரை இளைஞர்கள் மத்தியில், பேன்ட் கட்டும் பழக்கம் இருந்தது. தற்போது, எல்.கே.ஜி., குழந்தைகளும், நண்பர்கள் தினத்தை கொண்டாடுகின்றனர்.
ஒரு ரூபாய் முதல், 50 ரூபாய் வரை, பல்வேறு மாடல்களில் விற்கப்படுகின்றன. அதேபோல் வரும் ஆக., 9ல், 'ரக்ஷா பந்தன்' கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகைக்கு சேலத்தில் வசிக்கும் வட மாநிலத்தவர்களுக்கு, 100க்கும் மேற்பட்ட மாடல்களில், 2 முதல், 100 ரூபாய் வரை, பல்வேறு வண்ண கயிறுகள் விற்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.