/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குரூப் - 2 தேர்வு; 95 பேர் 'ஆப்சென்ட்'
/
குரூப் - 2 தேர்வு; 95 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 16, 2026 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமை பணி, 'குரூப் - 2' முதன்மை தேர்வு நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் கொண்டலாம்பட்டி பைபாஸில் உள்ள சவுடேஸ்வரி கல்லுாரி மையத்தில் மட்டும் தேர்வு நடந்தது. அங்கு கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: அனைத்து நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, குரூப் - 2 தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலையில், 561 பேர், மதியம் 596 பேர் என, 1,157 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் காலையில், 523 பேர் தேர்வு எழுதினர். 38 பேர் வரவில்லை. மதியம், 539 பேர் எழுதினர். 57 பேர் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

