/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செப்.3- 4 ல் கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்
/
செப்.3- 4 ல் கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்
செப்.3- 4 ல் கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்
செப்.3- 4 ல் கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்
ADDED : ஆக 23, 2025 02:54 AM

புதுடில்லி: ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து வரும் செப். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டில்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமன் தலைமையில் நடைபெறுகிறது.
மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி முறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் இருக்கும் என சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி, அறிவித்தார். இதன் மூலமாக ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஜி.எஸ்..டி. வரி விதிப்பு முறையில் 12 மற்றும் 28 ஆகிய வரி விகித பிடித்தங்களில் சீர்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால், சரக்கு மற்றும் சேவை வரி கணிசமாக குறைக்கப்படலாம் தவிர மருத்துவ காப்பீடு, ஆயுள்காப்பீடு ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் விலை குறைய வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.