ADDED : அக் 02, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, கோம்பைக்காட்டை சேர்ந்தவர் கணேசன், 75. இரவு நேர காவலாளியாக பணிபுரிந்தார். நேற்று காலை, 8:45 மணிக்கு சேலம் - பனமரத்துப்பட்டி சாலையில், ஒண்டிக்க-டையில் இருந்து பனமரத்துப்பட்டி வழியே சைக்கிளில் சென்றார்.
அப்போது எதிரே, வேகமாக வந்த, கே.டி.எம்., பைக் மோதி-யதில், படுகாயம் அடைந்த கணேசன், சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். பனம-ரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.