/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குண்டுமல்லி கிலோ ரூ.2,800 ஆங்கில புத்தாண்டால் 'கிடுகிடு'
/
குண்டுமல்லி கிலோ ரூ.2,800 ஆங்கில புத்தாண்டால் 'கிடுகிடு'
குண்டுமல்லி கிலோ ரூ.2,800 ஆங்கில புத்தாண்டால் 'கிடுகிடு'
குண்டுமல்லி கிலோ ரூ.2,800 ஆங்கில புத்தாண்டால் 'கிடுகிடு'
ADDED : ஜன 01, 2026 04:58 AM
சேலம்: சேலம், வ.உ.சி., பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் குண்டுமல்லி கிலோ, 1,400 ரூபாய்க்கு விற்றது. ஆனால் இன்று, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, குண்டுமல்லி விலை 'கிடுகிடு' என உயர்ந்து, நேற்று கிலோ, 2,800 ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல், 1,200க்கு விற்ற சன்னமல்லி, 1,400 ரூபாய், 600க்கு விற்ற ஜாதிமல்லி, 720 ரூபாய், 200க்கு விற்ற செவ்வரளி காக்கட்டான் தலா, 240 ரூபாய், 50க்கு விற்ற சாமந்தி, 70 முதல், 100 ரூபாய்க்கு விற்பனையானது. இருப்பினும் பூக்கள் தேவை அதிகம் இருந்ததால், மக்கள் வாங்கி சென்றனர்.மேலும் பனிக்காலம் என்பதால், குண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகை பூக்கள் அதிக அளவில் விளைச்சல் இல்லாமல், வரத்து குறைந்ததும், விலை உயர்வுக்கு காரணம் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.