ADDED : ஜூன் 19, 2026 02:24 AM
ஆத்துார்; கெங்கவல்லி அருகே நாகியம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி அன்பழகன் மனைவி சோபிகா, 25. இவருக்கு பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பமானார்.
இதனால் வளையமாதேவியை சேர்ந்த, சுகாதார தன்னார்வலர் மதுபாலா, 31, பெரியேரியை சேர்ந்த, நர்சிங் படித்துள்ள கவுரி, 31, உதவியுடன் பரிசோதனை செய்தபோது, கருவில் பெண் சிசு இருப்பது தெரிந்தது.
பின் கள்ளக்குறிச்சி மருந்தக உரிமையாளர் நாராயணன், 42, என்பவரிடம், கருக்கலைப்பு மாத்திரை பெற்று உட்கொண்டதில், சோபிகா உடல் பலவீனமானது. சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மூலம் சிசு அகற்றப்பட்டு, சோபிகாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கடந்த மே, 21ல், நாரா-யணன் உள்பட, 6 பேரை, தலைவாசல் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நாராயணன் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சேலம் கலெக்டர் இளம் பகவத் நேற்று உத்தர-விட்டார்.
