/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை சார்பில் 'ஹேக்கத்தான்'

ADDED : நவ 07, 2025 12:53 AM
சேலம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலையின், வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக, சேலம், சென்னை, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அதன் உறுப்பு கல்லுாரிகள் இடையே, 'இன்டர்னல் ஹேக்கத்தான் போட்டி, சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லுாரியில், கடந்த அக்., 27ல் நடந்தது. விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை துணைவேந்தர் சுதிர் தொடங்கி வைத்தார். பல்கலை பதிவாளர் நாகப்பன் வரவேற்றார்.
பல்கலை உறுப்பு கல்லுாரிகளை சேர்ந்த, 103 மாணவ, மாணவியர், 19 ஹார்டுவேர் அணிகளிலும், 10 சாப்ட்வேர் அணிகளிலும் இணைந்து பங்கேற்றனர். விழா நிறைவாக, மறுநாள் நடந்த விழாவில், சேலம் ஏரோஸ்பேஸ் நிறுவன, நிர்வாக இயக்குனர் சுந்தரம், வெற்றி பெற்ற அணிகளுக்கு, 50,000 ரூபாய் வரை ரொக்கப்பரிசுகளை வழங்கினார். மேலும், 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' சார்பில் பரிசு பெற்ற அணியினருக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பல்கலை இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் பிரிவு இயக்குனர் ஞானசேகர், பல்கலை இயக்குனர்கள், அலுவலர்கள், கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லுாரி முதல்வர் சசிகுமார், முதல்வர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.