ADDED : நவ 29, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாவட்டத்தில், பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் கணக்கீட்டு படிவம், 70 சதவீதம் மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது. மற்ற வாக்காளர்கள், கணக்கீட்டு படிவத்தை உடனே பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்காத வாக்காளரின் பெயர், டிச., 9ல் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
அதனால் தகவலுக்கு, அவரவர் பகுதிகளில் செயல்படும் வாக்காளர் உதவி மையத்தை நேரடியாகவோ, 1950 என்ற வாக்காளர் உதவி மைய கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, படிவங்களை பூர்த்தி செய்து வழங்க, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.

