ADDED : மார் 06, 2026 04:03 AM
நங்கவள்ளி: சேலம் மாவட்டம் வனவாசியில், 1.14 கோடி ரூபாய் மதிப்பில் சிறு அளவிலான கைத்தறி ஜவுளி பூங்காவை, கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தனர்.
தொடர்ந்து அமைச்சர் காந்தி பேசியதாவது:
இந்த பூங்காவில் முதல்கட்டமாக, 1.16 கோடி ரூபாய் மதிப்பில் உட்கட்டமைப்பு வசதி, தறிகள், உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டு சேலை, வேட்டி, சட்டை, பட்டு அங்க வஸ்திரம், துப்பட்டா, பாவாடை, பிரின்டட் பட்டு வகைகள், ஏற்றுமதி ரகங்கள் தயாரிக்கப்படும். நேரடியாக, மறைமுகமாக, 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 98 நெசவாளர்களுக்கு, 41.83 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில் கைத்தறித்துறை இயக்குனர் அமிர்தஜோதி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் எம்.பி., செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
