/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்வராயன்மலை பகுதியில் மரவள்ளி கிழங்கு அறுவடை விறுவிறு
/
கல்வராயன்மலை பகுதியில் மரவள்ளி கிழங்கு அறுவடை விறுவிறு
கல்வராயன்மலை பகுதியில் மரவள்ளி கிழங்கு அறுவடை விறுவிறு
கல்வராயன்மலை பகுதியில் மரவள்ளி கிழங்கு அறுவடை விறுவிறு
ADDED : ஜூலை 02, 2024 07:15 AM
ஆத்துார்: கல்வராயன்மலை பகுதியில், மரவள்ளி கிழங்கு அறுவடை செய்து வரும் நிலையில், மகசூல் குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்-துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த கல்வராயன்-மலையில் மேல்நாடு, கீழ்நாடு, வடக்கு நாடு, தெற்கு நாடு ஆகிய நான்கு ஊராட்சிகளில், 120க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு மரவள்ளி, பீன்ஸ், தக்காளி, மா, பலா உள்-ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்ப-டுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மர-வள்ளி கிழங்கு ஆத்துார், தலைவாசல் பகுதி-களில் உள்ள சேகோ ஆலைகளில் அரவைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது, கல்வராயன்ம-லையில் தொடர் மழை பெய்து வருவதால், கிழங்கு அழுகுவதை தவிர்க்க, அறுவடை பணி-களை தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், அறு-வடைக்கு தயார் நிலையில் உள்ள செடிகள், மழை காரணமாக துளிர் விடுவதால், அதன் கிழங்கு மாவுச்சத்து குறைந்துவிடும். இதை தவிர்க்கும் வகையில், செடியின் மேற்பகுதியை உடைத்து விடுகின்றனர்.
இதுகுறித்து, கருமந்துறை விவசாயிகள் கூறிய-தாவது: கல்வராயன்மலை பகுதியில் தாய்லாந்து, குங்கு-மரோஸ் போன்ற மரவள்ளி கிழங்கு ரகம் அதிக-ளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் கிழங்கில் அதிகளவில் மாவுச்சத்து இருக்கும். நடவு செய்து, வேர் பிடித்து கிழங்கு வரும்போது, போதிய மழை இல்லை. ஏக்கருக்கு, 16 டன் வரை விளைச்சல் இருக்கும். தற்போது, 10 டன் அளவிற்கு தான் விளைச்சல் உள்ளது. மாவுச்-சத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகி-றது.
ஐந்து கிலோ கிழங்கை எடுத்து, அவற்றில் உள்ள மாவுச்சத்து, பாயின்ட் முறையில் அளவீடு செய்-யப்படுகிறது. 28 பாயின்ட் வரை மாவுச்சத்து இருந்தால், ஒரு பாயின்டுக்கு, 400 முதல், 420 ரூபாய் என, வழங்கப்படுகிறது. இந்த பாயின்ட் அடிப்படையில், 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை கிழங்கிற்கு, 850 ரூபாய், ஒரு டன் கிழங்கிற்கு, 11 ஆயிரத்து, 760 ரூபாயாக தற்போது விலை கிடைக்கிறது. கடந்த மாதம், கிழங்கு பாயின்ட் அளவுகளில் ஒரு பாயின்ட், 480 ரூபாயாகவும், ஒரு டன் கிழங்கு 13 ஆயிரத்து, 400 ரூபாய் வரை இருந்-தது.
சில தினங்களாக மழை பெய்து வருவதால், மழை நீர் தேங்கும்போது, கிழங்கு அழுகல் ஏற்படும். எனவே, விளைந்த கிழங்குகளை அறுவடை செய்து வருகிறோம். மழை ஈரப்பதம் காரண-மாக, அறுவடை அதிகளவில் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினர்.