/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொத்தாம்பாடியில் சாலையோரம் தேங்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு
/
கொத்தாம்பாடியில் சாலையோரம் தேங்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு
கொத்தாம்பாடியில் சாலையோரம் தேங்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு
கொத்தாம்பாடியில் சாலையோரம் தேங்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 24, 2025 04:23 AM
ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, கொத்தாம்பாடி பஸ் ஸ்டாப்பின் வடக்கு பகுதியில், மேடு, பள்ளமாக காணப்படுகிறது.
இங்கு, மழைநீர் செல்லும் வகையில் வடிகால் வசதியில்லை. இதனால், சாலையோரம் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மழை நீரால், அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.அப்பகுதியில், மக்கள் கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மாலை நேரங்களில் கொசுத் தொல்லையும், மழைநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மழை நீர் குளம் போன்று தேங்குவதை தவிர்க்கும் வகையில், மழை நீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.