/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் சிரமப்பட்ட வாகன ஓட்டுனர்கள்
/
ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் சிரமப்பட்ட வாகன ஓட்டுனர்கள்
ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் சிரமப்பட்ட வாகன ஓட்டுனர்கள்
ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் சிரமப்பட்ட வாகன ஓட்டுனர்கள்
ADDED : அக் 28, 2025 02:05 AM
ஏற்காடு, ஏற்காட்டில், நேற்று கடும் பனிமூட்டம் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், தொடர் மழை பெய்ததால் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வீடுகளிலேயே மக்கள் முடங்கும் சூழல் நிலவியது. அதை தொடர்ந்து கடந்த, 4 நாட்களாக ஏற்காட்டில் மழை ஓய்ந்து வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் ஏற்காடு இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையில், நேற்று காலை முதல் பருவ நிலை மாறி, ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால், 5 அடி துாரத்தில் உள்ள வாகனம் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, சாலை சரியாக தெரியாததால், மிகவும் சிரமப்பட்டு வாகனத்தின் முகப்பு விளக்குளை எரிய விட்டபடியே ஓட்டி சென்றனர். மேலும் பனிமூட்டத்தால், ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.