ADDED : மே 04, 2026 03:12 AM
ஏற்காட்டில் உள்ள சில மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் லேசான சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதல், வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால் இரவு, 8:50 மணிக்கு, ஏற்-காடு, அதன் சுற்றுப்பகுதி முழுதும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் வெப்பம் தணிந்து ஏற்காடு, 'குளுகுளு' என மாறியது.
14,000 வாழை சேதம் உறுதிகொளத்துார், லக்கம்பட்டி ஊராட்சி பசுவேஸ்வரன்காடு, சந்தி-யான்காடு, ஊத்துக்குழி மலை அடிவாரம் உள்ளது. அப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள், கடந்த ஆண்டு ஜூனில் செவ்-வாழை, கதலி ரக வாழைக்கன்றுகளை சாகுபடி செய்தனர். நன்கு வளர்ந்த நிலையில் அறுவடைக்கு இரு வாரங்கள் மட்டும் இருந்-தன. கடந்த, 1 இரவு, லக்கம்பட்டி ஊராட்சியில் பலத்த காற்று வீசியது. இதில், 20,000க்கும் மேற்பட்ட செவ்வாழைகள் சாய்ந்து சேதமாகின.
இதுகுறித்து தோட்டக்கலை துறை அலுவலர்கள், இரு நாட்களாக கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். நேற்று மதியம் வரை, 14,000 வாழைகள் சேதமானது தெரியவந்தது. தொடர்ந்து கணக்கெடுப்பு நடக்கிறது.
லக்கம்பட்டியில் ராஜேந்திரன், பழனிசாமி, சதீஷ், ராமசாமி உள்-ளிட்ட பல விவசாயிகளின், 12 லட்சம் முதல், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் சேதமாகியுள்ளன. ராதாகிருஷ்ணன் என்-பவரது நிலத்தில், 2 வேப்ப மரம், ரமணி தோட்டத்தில், 3 தென்னை மரங்கள் சேதமாகின. அறுவடை நெருங்கும் நேரத்தில் வாழை மரங்கள் சேதமானதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
